பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அறிவியல் திருவள்ளுவம்

அளவின்றி” என்றும் குறள் திகழ்கிறது. "உணவே மருந்து' என்பது தமிழ் வழக்கு.

இக்கால மருத்துவர்கள் நீரிழிவு முதலிய நோய்களுக்கு உணவுக் கட்டுப்பாட்டையே வலியுறுத்துவதையும் கருதிப் பார்க்கவேண்டும்.

எவ்வகையிலும் உணவுபற்றித் திருவள்ளுவர் அறிவித் துள்ளவை இக்கால உணவு அறிவியலின் முேைனாடிகள் என்று பதியத்தக்கவை.

வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல்


"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"  (948)

இக்குறளிலுள்ள "நோய் நாடி" என்றது நோயை நாடிபிடித்து ஒர்ந்து பார்த்து "இன்ன நோய்" என்றறிவது. இது இக்கால மருத்துவ அறிவியலில் நோய் காணல் (Diagnosis) எனப்படுகிறது. நோய் முதல் நாடுவது, தமிழ் மருத்துவத்தில் நோய்க்குக் காரணம் "வளி முதலா எண்ணிய மூன்றில் எது" என்று நாடி கொண்டே காணுதல். இது இப்போது சிறுநீர், குருதி, மலம் முதலிய ஆய்வு களாலும் கதிர்ப்படம். கதிர்வீச்சுப்படம் கதிவீச்சுவரி முதலிய படப்பதிவுகளாலும் அறியப்படுகிறது. “அது தணிக்கும் வாய் நாடுவது" முதலில் நோயைக் குறைக்கும் மருந்தைத் தேர்வது. இது இக்காலத்தில் மருந்துகளாக மாத்திரை, மேற்பூச்சு, ஊசி, அறுவை, கதிர்ப்பாய்ச்சல் முதலியவற்றில் ஒன்றையோ பலவற்றையோ ஆராய்ந் தறிந்து செய்வது. இதனைத் திருவள்ளுவர் "தணிக்கும்" என்னும் சொல்லால் குறித்தமை கருதத்தக்கது.