பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

67

படிப்படியாக நோய் அறவே தீர்ந்து போகும் அளவு செய்தல். எனவே, 'தீர்ப்பான்' என்ற சொல்லால் மருத்து வித்தின் பொருள் அழுத்தம் புலனாகிறது. இவ்வாறு 'தீர்ப்பவன்'தான் மருத்துவத்திற்கு உயிரூட்டமளிப்பவன் இதற்கு 'மருத்துவன்' என்னும் சொல் ஈடாகாது. மருத்துவன் என்பதற்கு, மருத்துவம் செய்பவன்', 'மருந்து கொடுப்பவன்' எனத்தான் பொருள். இவன், மருந்தைத் தேர்பவன் தீர்ப்பவன்தான் மருந்தின் உயிரோட்டத்தால் நோயாளியின் உயிரோட்டத்தை இயக்குபவன்-இயங்க வைப்பவன். இவ்வழுத்தமுள்ள 'தீர்ப்பான்' என்னும் சொல் திருவள்ளுவரின் மருத்துவ ஆக்கச் சொல். இந்தச் சொல்லும் திருவள்ளுவரின் மருத்துவ அறிவியலைப் புலனாக்குகிறது.

அடுத்து 'மருந்து' என்றார். இது இயற்கை மூலிகையையும், நிலம்தரும் முப்பு’ என்னும் நீற்றையும்' செயற்கைக் கலவை, புடம் போடுவது, வடித்தெடுப்பது' அரைத்தெடுப்பது முதலியவற்றையும் குறிக்கும், இம் மருந்துதான் நோய் தீர்க்க இன்றியமையாதது. என்றாலும், மற்ற மூன்றும் அமைந்தால்தான் இம்மருந்து உரிய பயனை உரிய காலத்தில் தரும். எனவே, நான்கு கூறுகளில் ஒன்றாக மருந்தைக் குறித்தார்.

நான்காவதாக "உழைச் செல்வான்" குறிக்கப் பட்டான். இவன் நோயாளியின் அணுக்கன். உடனிருந்து உரிய நேரத்தில் உரியவைகளைச் செய்து துணை நிற்பவன். இக்காலத்தில் இதனை மகளிர் பெருமளவில் செய்கின்றனர். இன்னோர் 'செவிலியர்' எனப்படுகின்றனர். தமிழ் அகப் பொருள் இலக்கியங்களில் பெற்றெடுத்த தாய் 'நற்றாய்' எனப்படுவாள். அணுக்கமாக இருந்து போற்றி வளர்க்கும் தாய் 'செவிலித்தாய்' எனப்படுவாள். இச்செவிலித்தாய் போன்றவர் செவிலியர். மேலை மருத்துவத்தில் இச்-