பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.பதிப்புரை

திருவள்ளுவம் மாந்த வாழ்வு சிறப்புறத் தேவையான அனைத்து அறிவையும் தெளிவுபடுத்தும் ஒப்பற்ற நூல்.

அறிவியல் (விஞ்ஞான) கருத்துக்களின் மூலக்கூறுகளைத் தெரியப்படுத்தும் அறிவியல் நூல்.

இந்த நூல் மூலம் ஆசிரியர் திருவள்ளுவம் அறிவியல் அடிப்படையில் அமைந்துள்ளதைஅக்குவேறு ஆணிவேறாகச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.

இந்நூலாசிரியர் திருமிகு. கவிஞர்கோ. கோவை. இளஞ்சேரனார் தமிழுலகுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இயக்குநராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்தவர். சிறந்த எழுத்தாளர்; பேச்சாளர்; தமிழ்ப்பற்றாளர்; திருவள்ளுவம் பரவ உழைப்பவர்.

பேரறிஞர் அண்ணா வழி நடப்பவர்; கலைஞரின் அன்புக்குரியவர். பகுத்தறிவு பாதை மாறாதவர்.

அன்னாரின் இந்த நூலை வெளியிடுவதில் நாங்கள் மெத்தவும் மகிழ்கின்றோம்.

தமிழுலகம் எமக்கு அரவணைப்பு நல்கி எம்மை ஊக்குவிக்க வேண்டுகிறோம்.

நூலாசிரியர் அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இராசாபுரம் 614806

தமிழ்நாடு திருவள்ளுவர் திருமன்றம்

தி.ன. 2025 கார்த்திகை 10
(1994)

(பதிப்புத்துறை)