பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அறிவியல் திருவள்ளுவம்

எவ்வாறு செல்வமாகும்? திருவள்ளுவர் இவற்றைச் செல்வம். என்றமை பொருந்துமா?

பொருந்தும்.

இப்பொருத்தத்தில்தான் இன்றையப் பொருள் அறிவியலின் கோட்பாடு பொதிந்துள்ளது.

இன்றைய அறிவியலில் பொருளியல் (Ecnomics) ஒன்று. அன்றாட வாழ்விற்கு இன்றியமையாத ஒன்று. பொருளியலின் இன்றியமையாத முதற்கூறு செல்வம்.

செல்வம் பற்றி இன்றையச் 'செல்வ அறிவியல்' (Wealth Economics) என்ன கூறுகிறது(?) என்பதைக் காண வேண்டும்.

'செல்வம்' என்பது குறிப்பிட்ட நேரத்தில் இருக்கும் பொருளியல் சரக்கின் இருப்பைக் குறிக்கும் என்று. இன்றையச் 'செல்வ அறிவியல்' கணித்துள்ளது.

இதன்படி ஓர் இருப்புச் சரக்கைச் 'செல்வம்' என்று சொல்ல வேண்டுமானால் அதற்குப் பின்வரும் மூன்று இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.

ஒன்று:

மாந்தனின் தேவையை நிறைவேற்ற வேண்டும்.

இரண்டு;

அதன் அளவு முழுத்தேவைக்குக் குறைந்ததாக வேண்டும்.

மூன்று: