பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

அறிவியல் திருவள்ளுவம்

பாதுகாத்தல்" என்பது ஆழ்ந்த பொருள். இப்பொருளை அழுத்தமான சான்றுடன் உறுதிசெய்யவேண்டும். இப்பொருளின் பொதிவை இலக்கியங்களில் காணமுடிகிறது.

கடிய நெடிவேட்டுவன் என்னும் சிற்றரசன் தன்னை நாடிவந்த புலவர் பெருந்தலைச் சாத்தனாரை மதித்துப் போற்றிப் பரிசு வழங்காமல் காலங்கடத்தினான். இதனை விரும்பாத புலவர்,

                "முற்றிய திருவின் மூவர் ஆயினும்
                பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே"!

என்று பாடினார். 'முடிமன்னர் மூவேந்தரானாலும் எம்மை மதித்துப் போற்றிப் பாதுகாவாது ஈவதை யாம் விரும்ப மாட்டோம்' என்றார். இது கொண்டும் 'பெட்பு' என்னும் சொல் 'போற்றிப் பாதுகாக்கும்' கருத்தைக் கொண்டது என்பதை அறியலாம்.

‘பெட்பு - தக்கது' எவ்வாறு "பெட்டக்க” தாயிற்று? 'நட்பு' என்னும் சொல் 'நட்டு' என்று ஆகி 'நட்பு கொண்டு' என்னும் பொருளைத் தரும். திருவள்ளுவரும் 'முகத்தால், நட்புக்கொண்டு' என்பதை "முகம்நட்டு" (830) என்று பதிந்துள்ளார். நாலடியாரும் நட்ட கால்' (நட்பு கொண்ட போது) என்பதை "நட்டக்கால்" என்றமைத்தார். இவை போன்றே பெட்பு’ என்பதும் பெட்டு' என்றாகி, ‘பாதுகாப்பு’ என்னும் பொருளைத் தந்தது.

செல்வத்தைப் பாதுகாப்பாக வைக்க மரத்தால் செய்யப்பட்டதைப் 'பெட்பு' (பெட்டு+இ) என்கிறோம். பெரும் மதிப்புடைய செல்வத்தைப் பேணி வைக்கும் பெரும்


1. பெருந்தலைச் சாத்தனார்: புறம்: 205-2

2. நாலடியார்: நாலடி: 75-1