பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

அறிவியல் திருவள்ளுவம்

வலியுறுத்தியுள்ளதையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம். இதனால், திருவள்ளுவம் 'செல்வப் பொருளிய'லாம். அறிவியலில் விளங்குகின்றது.

பொருளியல் கோட்பாடும் திருவள்ளுவமும்

'பொருளியல்' என்னும் இயல் 18ஆம் நூற்றாண்டில் தான் உருப்பெற்றது. இப்பொருளியலின் தந்தை ‘ஆதம் சுமித்து' என்பார். இவர் காலம் 1723-1790. இவர் வகுத்த பொருளியற் கோட்பாட்டின் அடித்தளக் கோட் பாடுகள் மூன்று அவை :

பொருள்களின் ஆக்கம் (Production)

பண்டமாற்று (Exchange)

பகிர்வு (Distribution)

பின்னர் ஆய்வுகளால் இம்மூன்று பகிர்வுக்கு முன்னர் (Consumption) என்பதும் இணைக்கப்பெற்று நான்காயின.

இவை நான்கும் பொருளியலின் அடித்தளக் கோட் பாடுகள். இவற்றைத் திருவள்ளுவர்,


                "இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த
                வகுத்தலும் வல்ல தரசு" (385)

என்னும் குறளில் காட்டினார்.

பொருள்களை விளைச்சலால் உண்டாக்குதலும், அவற்றைத் தொகுத்தலும், போற்றிப் பாதுகாப்பாகக் காத்தலும், காத்தவற்றைப் பகிர்ந்து வழங்கலும், வழங்கப்பட்டவை. மாந்தர்க்கோ உயிரினங்களுக்கோ நுகர்வு