பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

85

ஆதலும் ஆகிய நான்கையும் திறமையுடன் செய்வதுதான் ஆட்சி செய்தற்குரிய அரசாகும். இதை அக்கால மன்னர் அரசுக்குக் குறிக்கப்பட்டனவாயினும் இக்கால மக்கள் ஆட்சிக்கும் மாற்ற மின்றிப் பொருந்துகின்றன.

இக்காலப் பொருளியல் நான்கை குறட் கருத்துடன் பொருத்திக் காணுமாறு திருக்குறள் அமைந்துள்ளமை குறிக்கத் தக்கது

        வள்ளுவம் - பொருளியல்
        இயற்றல் - ஆக்கம்
        ஈட்டல் காத்தல் - மாற்று
        வகுத்தல் - பகிர்வு
        வகுத்து வழங்கலும் பெறலும் - நுகர்வு

மேலும், பொருளியலின் பல்வகைக் கூறுகளையும் திருவள்ளுவர் தம் திருவள்ளுவத்தில் காட்டியிருக்கின்றார். இவற்றை விரிவாகப் பொருளியல் வல்லுநர் முனைவர் பா. நடராசன் அவர்களும், திருவள்ளுவர் விருதுபெற்ற குறளறிஞர் கு. ச. ஆனந்தன் அவர்களும் நுணுக்கமாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளனர்.

அவற்றையும் இணைத்துப் பார்த்தால் திருவள்ளுவம் 'செல்வப் பொருளிய'விலும் பொருளி அறிவிய'விலும் விளக்கம் பெறுவதை அறியலாம்.

இக்கால ஆங்கில அகரமுதலிகளில் 'பொருளியல்'(Economics) என்னும் சொல்லுக்குக் காட்டப்பட்டுள்ள பொருள்: