பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

91

கண்டுள்ளனர். இக்கரும்புள்ளிகளின் வெப்பக்கூற்றால் மண்ணுலகில் உயிரினம் பயனடைகிறது என்றும் கண்டுள்ளனர்.

இவ்வகையிலும் சூரியனின் வெப்பக் கதிர் மண்ணிற்கு உரம் ஊட்டுவதாகிறது.

18-ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட இவ்வறிவியல் உண்மை கி.மு. முதல் நூற்றாண்டுத் திருவள்ளுவத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளமை வியந்து போற்றக் குரியது.

எனவே, விளைவு' என்பதிலும் திருவள்ளுவம் இக்கால "கிலத்துஅறிவியல்" பாங்கை முன்னோடி அடையாளமாகக் காட்டுகிறது.

'விளைவு' என்பதால் நேரும் பயன்பாடுகள் தாம் மாந் தர்க்கும் உயிரினங்கட்கும் இன்பத்தை வழங்குகின்றன. இத்தொடர்பில் இன்பம் அடுத்துக் காணப்படவேண்டியது.

ஈ. இன்பம்

மனத்தின் இயக்க விளைவுதான் உணர்ச்சி.

"மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி" (453) என்றார் திருவள்ளுவர். உணர்ச்சி உடம்பில்-மெய்யில் வெளிப்படுவதை (மெய்யில் படுவதை) 'மெய்ப்பாகு' என்றனர் தமிழ்ச் சான்றோர்.

உணர்ச்சி வெளிப்பாடாம் 'மெய்ப்பாடுகள்' எட்டு.