பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

அறிவியல் திருவள்ளுவம்

          "இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
          துன்பம் உறுதல் இலன்” (628)

என்னும் திருக்குறள் இன்பத்தைப் பற்றிய மூன்று கருத்துக்களைக் கொண்டுள்ளது.

"இன்பம் விருப்பத்தைத் தரும்.

இன்பத்தையே எதிர்பார்த்து இல்லாமல் அதனை விரும்பாதிருக்கவும் வேண்டும்.

இன்பத்திலேயே விருப்பம் கொள்ளாதிருந்தால் துன்பம். வராது" இவை உள்ளத்தால் எழுய் உணர்ச்சித் தொடர்புடையவை.

"இன்பம் பயக்கும் வினை" (669) என்றதில் இன்பத்தை ஒருவன் "செய்யும் செயல் தரும்" என்று. செயல் தொடர்பு உள்ளது.

மேற்காணப்பட்ட நான்கையும் பொருத்தி நோக்கினால் உடன்பாட்டுப் பொருளாக 'விரும்பிச் செயலாற்றினால் இன்பம் தோன்றும்' என்பது கிடைக்கிறது.

பொதுவாக இன்பம் என்றால் முடிவில் மாந்தர்க்குத் தோன்றுவது உடலுறவு இன்பமாக உள்ளது. இதனைச் 'சிற்றின்பம்' என்றனர் இடைக்காலத்தார். திருவள்ளுவர்க்கு இது கருத்தன்று. கருத்தாயிருப்பின் 'காமத்துப் பால்' பாடிக் காதலினைச் சிறப்பித்திருக்கமாட்டார்.

          “சிற்றின்பம் வெஃகி (அவாவி) அறணல்ல செய்யாரே
          மற்றின்பம் வேண்டு பவர்"(173)

என்னும் திருக்குறளில் உள்ள "சிற்றின்பம்" என்பது. ,சிறிதளவான இன்பம்', 'சிறு நேர இன்பம்’ எனப் பல்வகை.