பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை, இளஞ்சேரன்

95

அவாவாலும், அவாக்கொண்டு செய்யப்படும் செயல்களாலும் உண்டாகும் உணர்வுகளையே குறிக்கும். காம இன்பத்தை மட்டும் குறிக்காது. மற்றும் "இன்பம் இடையறாது ஈண்டும்" (369) என்றார். இது இன்பம் சிறு அளவிலோ சிறுநேரத்திலோ மட்டுமன்று, தொடர்ந்தும் இருப்பது என்பதையும் குறிக்கிறது. மேலும் "பேரறிவு” (215). "பேராண்மை" (148) என்றெல்லாம் பாடியவர் 'பேரின்பம்' என்னும் சொல்லமைப்பையும் காட்டவில்லை.

எனவே, இன்பம் என்பது ஒரு நிலையை மட்டும் குறிப்பதன்று.

"தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு" (239) என்றதால்,

"காமுறுவர் கற்றறிந்தார்" (399) என்னும் கல்வி யின்பம் குறிக்கப்பட்டது.

"ஈத்துவக்கும் இன்பம்" (228) என்றதால் இல்லாத வர்க்குக் கொடுத்து அவர் மகிழ்வதைப் பார்த்து உவப்பது இன்பமாகிறது.

"செறுவார்க்கும் சேண் இகவா இன்பம்" (869) என்றதால் எதிரியின் அச்சத்தால் போரிலும் மற்றவனுக்கு இன்பம் தோன்றுவது குறிக்கப்பட்டது.

"ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்" (156) என்றதால் பிறரை ஒறுப்ப (தண்டிப்ப) தாலும் இன்பம் தோன்றுவது குறிக்கப்பட்டது.

"இன்பம் பயக்கும் மாசறு காட்சியவர்க்கு" (352) என்றதால் அறிவால் இன்பம் தோன்றுவது குறிக்கப் பட்டது.