பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

117


உன்னதமான எண்ணத் தெளிவு. மிக உன்னதமான அனுமானம், உயர்ந்த சிந்தனைத் தெளிவு. காலமும் இடமும் அணுக்களாலானவை அல்ல என்பதும் இவர்தம் கருத்து. சுருங்கக்கூறின் உலகத்தோற்றத்திற்கு அணுக்களாலான ஸ்கந்தங்களும் (பஞ்ச பூதங்களும்) அணுக்களைச் சாராத கால, இடப் பரிமாணங்களும் இன்றியமையாதவை என்று உணர்த்தியவர்கள் சமணர்கள். இவர்களது விளக்கம் பற்றிய அறிவியலோடு ஓரளவு பொருந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆகாயம் எனப்படும் விண்வெளிபற்றிய இவர்தம் கருத்தையும் காண்போம். இவர்கள் விண்வெளியை இருபகுதிகளாய்க் காண்பர். ஒன்று, இயற்பியல்பற்றிய பகுதி, இதனை லோகாகாசம் என்பர். மற்றொன்று, அலோகாகாசம் என்பது. இது லோகாகாசத்திற்குமேல் அமைந்திருப்பது. உடலாகிய தளைகளினின்றும் வினைகளினின்றும் விடுபடும் ஆன்மா, அலோகாகாசத்தை ஞானானந்த இருப்பிடமாய்க்கொண்டு தங்கும் என்பது இவர்தம் தத்துவக் கருத்தாகும்.

சக்திகள் : உலகத் தோற்றத்துக்கு மூலப் பொருள்கள் மட்டுமேயன்றிச் சக்தியும் இன்றியமையாதது என்று உணர்ந்தவர்கள் சமண பெருமக்கள். இந்தச் சக்திகளுள் ஒன்று இயக்கு சக்தி; மற்றொன்று நிறுத்து சக்தி, இவற்றை இவர்கள் முறையே தர்மம், அதர்மம் என்ற பெயர்களால் குறிப்பிடுவர். தர்மம், இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பொருளை இயக்க வல்லதேயன்றி நிலையான ஒரு பொருளை இயக்காது. இம்முறையில் அதர்மமும் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பொருளை நிறுத்தாது. இது நின்லையானவற்றை அதே நிலையில் இருக்க உதவுவது.

உலகம் அணுக்களாலாவதற்குத் துணைநிற்பவை. காலம், இடம் (ஆகாயம்), தர்மம், அதர்மம் என்பவை : இங்ஙனம் அணு, காலம், இடம், தர்மம், அதர்மம் என்ற ஐம்பொருள்களின் அடிப்படையில் தோன்றும் பொருள்களே அசீவன் என்பது. சீவன் என்பது ஞானமாகிய முற்றறிவின் நிலை.

வினைக்கொள்கை : சமணத்தில் வினைக்கொள்கை சிறப்பிடம் பெறுகின்றது. காப்பியப் பாவிகங்களுள் ஒன்று ‘ஊழ்