பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


வினை உருத்து வந்துாட்டும் என்ற உண்மையாகும். சமணர்க்கு ஆழமுதற்கடவுள் உடன்பாடில்லையாதலின். ஊழ்வினை தானே உருவெடுத்துக் கருத்தாவைப் பயன் நுகரச்செய்யும் என்று எண்ணினர். சிலம்பில் சாரணர் கூறும் சமயப் பேருரையில்,

"ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை இட்ட வித்தின் எதிர்த்துவத் தெய்தி ஓட்டும் காலை ஒழிக்கவும் ஒன்னாது." (10:171-3)

என ஆகும் பகுதியால் அறியலாம். ஒருவர் புரியும் செயல்களின் விளைவு அவருக்கு வந்து சேருங்கால் யாவராலும் நீக்க முடியாது. எதனை விதைக்கின்றோமோ அதுதான் விளையும். 'வல்வினை' என்றதால் வினையின் வலிமை போதரும். ஒழிக்கவும் ஒண்ணாது என்பதால் அதன் பிடியினின்றும் தப்ப முடியாது. பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்ததை 'வல்வினை அனைத்த கோல்' என்றார். இளங்கோ அடிகள். வள்ளுவரும் ஊழிற் பெஇவலி என்றார். செய்த வினையை போக்க 4. விசாலும் முடியாது, அதுபவித்தே தீர வேண்டும் என்ற உறுதியான வினைக்கொன் கையினைச் சமணத்தில் காண்கின்றோம்.

கன்மமும் ஓர் இயற்பியல் பொருள் என்பது இவர்களது முடிவு. கன்மமும் ஒரு புத்கலம் போன்றது. அதன் அணுக்கள் உலக முழுவதும் பரவியுள்ளன. சீவனைச் சார்ந்திருக்கும் கன்மம் வேறு. உடலோடு சார்ந்திருக்கக்கூடிய கன்மம் வேறு. இவை இரண்டும் பால கன்மம். திரவிய கன்மம் என முறையே குறிப்பிடப்பெறுகின்றன. உடலை விட்டுச் சீவன் நீங்கும் போது கன்மம் அதனைத் தொடர்ந்து செல்லும். இறுதியாய், சீவன் வீடுபேறு அடையும்போதுதான் அது நீங்கும். வீடுபேறு அடையாமல் மறுபிறப்பிற்கு வந்தால் சீவனோடு கன்மமும் தொடரும்.

விடுதலைக்கு வழி : பற்றுதான் பிறப்பிற்குக் காரணம்: பாசம் நீக்கினால் பற்று அகன்று போகும். "அற்றது பற்றெனின் உற்றது வீடு"(திருவாய் 1:2:5) என்பது திருவாய்மொழி. அருகதேவன் அருளிய ஆகமங்களைக் கற்றுணர்ந்து மெய்யுனர்வாகிய ஒளியினைப் பெற்றால்தான் பிறவிச் சிறையினின்றும் விடுதலை பெற வழி அமையும். இதனைச் சாரணர்,