பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

124

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


பௌத்த சமயப் பிரிவுகள் : எல்லாச் சமயங்களிலும் தீர்க்கதரிசிகள்(Prophets) கண்ட உண்மைகள் போதித்த கருத்துகள் #433 j *** เส#3; :##. 44 รfร์: #; இருப்பதில்லை. சில பழக்கவழக்கங்கள் நடைமுறைக் கோட்பாடுகள், கருத்து மாறுபாடுகள் புகுந்து பிளவுகள் உண்டாகிவிடுகின்றன. இன்றைய அரசியல் கட்சிகளிலும் இந்தப் பிளவுகளை காணலாம். பெரும்பாலான மக்கள் சில தலைவர்களின் கீழ் செம்மறியாடுகள்போல் திரண்டு செயற்படுகின்றனர்.

பௌத்த சமயத்திலும் பிற்காலத்தில் பிளவுகள் ஏற்பட்டன; பல பிரிவுகள் உண்டாயின. பிட்சு சங்கத்தில் புதிதாய்ச் சில பழக்கவழக்கங்கள் புகத் தொடங்கின. அவற்றைக் கண்டிக்கும் பொருட்டு வைசாலி நகரத்தில் 700 பிட்சுகள் மாநாடு கூடி, எட்டு மாதம் ஆராய்ந்தனர். கண்டிக்கப்பெற்ற 10,000 பிட்சுகள் தனிப்பிரிவாய்ப் பிரிந்து போய்விட்டனர் என்று தீப வம்சம் என்ற நூலால் அறிய முடிகின்றது. புத்த பகவானின் ஆதிக் கொள்கைகளைப் பின்பற்றி வரும் பெளத்த மதத்தைத் தேரவாத பௌத்தம் என்றும், புதிய கொள்கைகளைக் கொண்ட பௌத்தத்தை மகாயான பௌத்தம் என்றும் வழங்குவர். தேரவாத பௌத்தமே பிற்காலத்தில் ஹீனயான பௌத்தம் என்ற திருநாமம் பெற்றது. ஹீனயான பௌத்தம் பர்மா நாட்டிலும் இலங்கைத் தீவிலும் பரவியுள்ளது. மகாயானம் நேபாளத்திலும் (புத்தர் அவதரித்த மாநிலம்) திபேத், மங்கோலியா, கொரியா, சீனம், ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது. தேரவாத பௌத்த நூல்கள் யாவும் பாலி மொழியில் எழுதப் பெற்றவை. மகாயான பௌத்த நூல்கள் வடமொழியில் வரையப்பெற்றவை. மணிமேகலையில் கூறப்பெற்ற சமயக் கருத்துகள் யாவும் தேரவாதபௌத்தத்தைப்பற்றியவையாகும். இவற்தைச் சாத்தனார் திரிபிடகத்திலிருந்து மிக அழகாய்ச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்துக் கூறியுள்ளார்.

புத்தர் உலகம், ஆன்மா, இறை என்பவற்றை ஆய மேற்கொண்ட வழிமுறைகள் முக்கியமாய் இரண்டு. அவை, பிரத்திபட்சமும் அதுமானமும் ஆகும். அருமறைகளிலுள்ள கருத்துகளை அவர் ஏற்கவில்லை. ஆகவே, கடவுள் உண்டு என்ற கொள்கை அவருக்கு உடன்பாடு இல்லை. பெளத்தம், பிறப்பு பல உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுகின்றது. கன்ம பலன்களின் வழி மறுபிறப்பு அமையும் என்பதற்கும் உடன்பாடு