பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சமயம், தத்துவம்

125


தெரிவிக்கின்றது. அந்தக் கன்மம் ஆன்மாவை அடைவதற்க்கு கடவுள் என்ற ஒன்று வேண்டா தானாகவே, நேரக்கூடியது என்ற கருத்தையுடையது. பெளத்தம் ஆன்மா கன்மங்களிலிருந்து வீடுபேறு அடைவதற்கும் கடவுள் வேண்டா என்பதும் அச்சமயக் கொள்கை. மனித முயற்சியாலும், ஒழுக்க முறைகளாலும் பிறரது துன்பங்களை நீக்குவதன் மூலமும் வீடுபேறு எய்த முடியும் என்பது இச்சமயத்தின் முடிந்த முடியாகும்.

பெளத்த சமயக் கொள்கைகள் : புத்த பெருமானின் கொள்கைகளாவன: “இவ்வுலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் அழியக்கூடியவை; யாவும் நிலையற்றவை. மிகவும் நெருங்கியுள்ள பொருள்களினின்றும் நாம் நம்மை விலக்கிக் கொள்ளவேண்டும். அதுவே பேரின்பத்தை அடைவதற்கான வழி” என்பதாகும். இக்கருத்து.

“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்”

(குறள் - 341)

என்ற வள்ளுவப் பெருமான் கருத்தோடு ஒப்புமை உடையதாகும்.

புத்தர் பெருமான் கூறியது: “நாம் விதைப்பது, அன்பு தூய பணிகளே அதனை வளப்படுத்தும் மழை; ஞானமும் அடக்கமும் உழுபடைகள்”. மாறிமாறிப் பிறக்கும் பிறவிகள் பல உள என்பது புத்தரின் கொள்கையாகும். உலகமே துன்ப மயம்: அதிலிருந்து ஒருவர் விடுபடுவதே நிர்வாண மோட்சம்.

நான்கு உண்மைகள் : நிர்வாண மோட்சம் அடைவதற்கு நான்கு உயர்ந்த உண்மைகளை அறிதல் வேண்டும். அவை : (i) துக்கம், (ii) துக்கோற்பத்தி, (iii) துக்க திவாசனம், (iv) துக்கதிவாரண மார்க்கம் என்பனவாகும். புத்தர் பெருமான் போதி மரத்தடியில்48[1] மெய்ஞ்ஞானம் பெற்ற பொழுது இவற்றை அறிந்தார். இந்த நான்கன் அடிப்படையில்தான் அப்பெருமான் எழுப்பிய சமயக் கருத்துகளாய் மாபெரும் கட்டடங்கள் யாவும் நிற்கின்றன. இவை நான்கும் மணிமேகலையில் தெளிவாய் விளக்கப்பெற்றுள்ளன.


  1. 48. 1969ஆம் ஆண்டு அக்டோபர்த்திங்களில் இந்தப் போதிமரத்தடியில் யானும் என் துணைவியும் இருக்கும் பேறு பெற்றோம். புத்தர் பெருமான் பெற்ற அநுபவத்தை ஓரளவு பெற்றோம்.