பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

135


களில் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனால் ஏராளமான ஒளி ஆற்றல் அல்லது கதிர்வீச்சு ஆற்றல் ஆதவனிடம் உற்பத்தியாகி, விசும்பு வெளியைக் கடந்து, நொடி ஒன்றுக்கு 1,86,000 மைல் வீதம் விரைந்து வந்து பூ மண்டலத்தை அடைகின்றது. அது நம்மை வந்தடைவதற்கு, எட்டு மணித்துளிகள் ஆகின்றன. ஆதவனின் உட்புறத்திலுள்ள வெப்பம் 20,000,000° சுழியுள்ளது. அங்குள்ள அமுக்கமும் ஓர் அங்குலத்திற்கு 15,000,000,000 இராத்தல்களாய் உள்ளது. அமுக்கமும் ஆதவனிடம் ஒன்றாய்ச் சேர்ந்து இருப்பதால்தான் ஆதவனிடமுள்ள கோள நிலை எலக்ட்ரான்கள் உதிர்க்கப்பெறுகின்றன.

ஆதவனின் தேய்வு : ஒவ்வொரு நொடியிலும் ஆதவனிடமிருந்து ஒன்றரைக் கோடியே கோடி குதிரைத்திறன் (Horse Power) அளவுகொண்ட ஆற்றலைப் பூமி பெறுவதாய் அறிவியலறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். இதில் மூன்றில் ஒரு பங்கு எரி, கடல் முதலிய நீர்நிலைகளிலிருந்து நீரை ஆவியாய் மாற்றுவதற்குப் பயன்படுகின்றது. இவ்வாறு நீராவியாய்ச் செல்லும் நீர்தான் பின்னர் மலைகளின் உச்சியில் மேகமாய் நின்று மழையாய்ப் பொழிகின்றது. மழைநீர் ஆறுகளாய் பாய்வதனால் அருவிகள் (Water Falls) உண்டாகின்றன. உலகிலுள்ள எல்லா ஆறுகளிலும் ஓடுகின்ற நீரின் ஆற்றவைக்கொண்டு சுமார் 35 கோடி குதிரைத்திறன்[1] அளவு ஆற்றலைப் பெறலாம் என்று மதிப்பிடுகின்றனர். ஆதவனின் வெப்பத்தையேட்டியே காற்றுகளும் வீசுகின்றன; பருவக்காற்றுகளால்தான் மழையும் பெய்கின்றது. உழவுத்தொழில் நடைபெறுவதற்கு ஆதவனே முதற்காரணம் ஆவான். இத்தனை நிகழ்ச்சிகளுக்கும் நெருப்புக்கோளம்போல் உள்ள ஆதவன், ஒவ்வொரு நொடிக்கும் நாற்பது இலட்சம் டன் அளவு தேய்ந்து அழிகின்றமையே காரணமாகும்.

(6) தாவரங்கள் பகலவனின் ஆற்றலைப் பெறல்

இயற்கையில் நடைபெறும் ஓர் அற்புத நிகழ்ச்சி ஒளிச்சேர்க்கை (Photo - synthesis) என்பது. தாவரங்கள் காற்றிலுள்ள கரியமிலவாயு, வேர்களின் மூலம் பெறும் நீர் இவற்றை


  1. 55. குதிரைத்திறன் - திறமை வாய்ந்த குதிரைகள் வேலை செய்யும் திறனின் சராசரியை அளவிட்டு இந்த அலகை வகுத்தவர். ஜேம்ஸ் வாட் என்பார். 550 இராத்தல் எடையுள்ள பொருளை ஒரு விநாடி நேரத்தில் ஓர் அடி உயரம் தூக்கக்கூடிய திறனே குதிரைத்திறன் ஆகும்.