பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


உட்கொண்டும், கதிரவன் ஒளிக்கற்றைகளாகவும் வெப்பக்கதிர்களாகவும் உமிழும் ஆற்றலைத் துணைக்கொண்டும் (இதுதான் அணுவாற்றல்; நீரிய உட்கருக்கள் பரிதிய உட்கருக்களால் மாறும்போது உண்டாவது) கார்ப்போஹைட்ரேட்டுகள் போன்ற பொருள்களைச் சேமித்து வைக்கும் நிகழ்ச்சிதான் ஒளிச்சேர்க்கை என்பது. தாவரங்கள் கதிரவனின் ஒளியைக்கொண்டே வாழ்கின்றன என்பதை அறிவோம். அவை ஆதவனிடமிருந்து ஒளியையும் வெப்பத்தையும் நேரே விழுங்குகின்றன. இந்த வையத்தில் தாவரங்களைத் தவிர வேறு எந்தப் பொருள்களும் கதிரவனிடமிருந்து நேரடியாய் ஆற்றலைப் பெறும் திறனை அடையவில்லை. மனிதன் உட்பட விலங்கு, பறவை முதலிய பிராணிகள் யாவும் கதிரவன் காலும் வெப்பத்தையும் ஒளியையும் விழுங்காமல் - விழுங்க முடியாமல் - அவற்தை விழுங்கிய தாவரங்களை விழுங்கிக் கதிரவனின் ஆற்றலைப் பெறுகின்றன. புலி, சிங்கம் போன்ற புலால் உண்ணும் விலங்குகளோ கதிரவன் ஆற்றலை நேரே விழுங்குவதில்லை; தாவரங்கள் உண்டாக்கும் பொருள்களை விழுங்குவதுமில்லை. அவை பயிருண்ணும் விலங்குகளைக் கொன்று தின்று ஆற்றலைப் பெறுகின்றன. ஏன்? திருமாலின் வாகனங்களாய்ச் செயற்படும் பெரிய திருவடி (கருடன்) புலால் உண்பவன், சிறிய திருவடியோ (அநுமன்) மரக்கறியை உண்பவன், இதனால்தான் வைணவர்களுள் சிலர், புலால் உண்பவர்களாய் உள்ளனரோ என்று நினைக்க வேண்டியுள்ளது. சிவபெருமானின் வாகனமாகிய எருது மரக்கறி உண்பதுதான். சைவர்களுள் சிலர் அசைவ உண்பது ஏனோ தெரியவில்லை! சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளல் பெருமான்.

“உயிர்க்கொலையும் புல்லைப்பொசிப்பும்
        உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர்அவர்
        புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல்
        மாத்திர மேபுரிக”[1]

என்று பகவர்வர். மேலும் அப்பெருமான்,


  1. 56. திருவருட்பா = ஆறாம் திருமுறை - அருள் விளக்க மாலை - 71 (4160)