பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

143


“யாது மாகி நின்றாய்- காளி!
        எங்கும் நீநி றைந்தாய்!
தீது நன்மை யெல்லாம் - காளி
        தெய்வ லீலை யன்றோ.”[1]

“யாது மாகி நின்றாய் - காளி!
        எங்கும் நீநி றைந்தாய்!
தீது நன்மையெல்லாம் - நின்றன்
        செயல்க ளன்றி யில்லை.”[2]


“எண்ணிலாப் பொருளும் எல்லையில் வெளியும்
        யாவுமாய் நின்றனை போற்றி” [3]

“எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் - பண்ணியதோர் சக்தி”[4]

என்ற பாடற்பகுதிகளில் ‘எல்லாம் சக்தி மயம்’ என்ற கருத்து தெளிவாவதைக் காணலாம்.

இதே கருத்தை வேறு மூன்று பாடல்களில் விரிவாய் விளக்குவர்.

“பரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை,
        பரவும் வெய்ய கதிர்எனக் காய்ந்தனை;
கரிய மேகத் திரளெனச் செல்லுவை,
        காலும் மின்னென வந்துயிர் கொல்லுவை;
சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை.
        சூழும் வெள்ளம் என்உயிர் மாற்றுவை;
விரியும் நீள்கடல், என்ன நிறைந்தனை,
        வெல்க காளி எனதம்மை வெல்கவே
வாயு வாகி வெளியை அளந்தனை,
        வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை;
தேயு வாகி ஒளிஅருள் செய்குவை;
செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை;”


  1. 67. தோ. பா. 29 காளிப்பாட்டு
  2. 68. தோ. பா. 30 காளி ஸ்தோத்திம் - 1
  3. 69. தோ. பா. 17 மகாசக்தி பஞ்சரம் - 2
  4. 70