பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

144

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்




பாயும் ஆயிரம் சக்திக ளாகியே
     பாரி லுள்ள தொழில்கள் இயற்றுவை:
சாயும் பல்லுயிர் கொல்லுபவை நிற்பன
     தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை.
நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை:
     நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை:
நிலத்தின் மீது மலையும் நதிகளும்
     சாரும் காடும் கனைகளும் ஆயினை:
குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம்
     கூட்டி வைத்துப் பவநலந் துய்த்தனை:
புலத்தை யீட்டிங் குயிர்கள்செய் தாய், அன்னே!
     போற்றி! போற்றி! நினதருள் போற்றியே!”71[1]

என்பவற்றில் இது விரிவாய் விளக்கப்படுதலைக் கண்டு மகிழலாம்.

‘எல்லாம் சக்திமயம்’ என்ற கருத்து பிறிதொரு கோணத்திலும் காட்டப்பெறுகின்றது:

“துன்ப மிலாத நிலையே சக்தி,
     தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;
அன்பு கனிந்த கனிவே சக்தி,
     ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி;
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
     எண்ணத் திருக்கும் எரியே சக்தி;
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
     முத்தி நிலையின் முடிவே சக்தி.”72[2]

இதனைத் தொடர்ந்து வரும் பாடல்களிலும் சக்தியின் பரிணாமம் பல்வேறு விதமாய்க் காட்சியளிக்கின்றது, முத்தாய்ப்பாய்.

“விழ்வு தடுக்கும் விறலே சக்தி,
     விண்ணை அளக்கும் விரிவே! சக்தி;
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
     உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி”,73[3]


  1. 71. தோ.பா. 33 மகாசக்தி வாழ்த்து - 3, 4, 5
  2. 72. தோ.பா., 20 சக்தி - 1
  3. 73. தோ.பா.20 - சக்தி - 3