பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

145


என்று கூறிக் களிக்கின்றார் கவிஞர். மேலும்,

“பூதம் ஐந்தும் ஆனாய் - காளி!
        பொறிகள் ஐந்தும் ஆனாய்!
போத மாகி நின்றாப் - காளி!
        பொறியை விஞ்சி நின்றாய்.”[1]

என்று. அன்னை இந்திரியங்களாகவும் நிற்கின்றான். அவற்றைக் கடந்தும் நிற்கின்றாள் என்று காட்டுவர்.

‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பது பெரியோர் வாக்கு. இதனையொட்டியே, எல்லாத் தொழில்களும் செயல்களும் சக்தி தேவியின் அருளால்தான் நடைபெறுகின்றன என்று நம்புபவர், பாரதியார்.

“செய்யும் கவிதை பராசக்தி
        யாலே செயப்படுங்காண்”<ref>75. வி.நா.மா. 26</ref>

என்று தாம் படைக்கும் கவிதைகளும் அன்னை பராசக்தியின் அருளால்தான் வெளிவருகின்றன என்று கூறுவதைக் காணலாம். பிறிதோர் இடத்தில்,

“பாட்டினிலே சொல்லுவதும்
        அவள்சொல் லாகும்
பயனின்றி உரைப்பாளோ?
        பாராய், நெஞ்சே!”[2]

என்று இக்கருத்தினையே மீண்டும் உரைப்பதைக் காணலாம். எனவே, பாடுவதும் அவள் அருளே என்று உணர்ந்த கவிஞர்,

“பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
        பாலித்திட வேணும்.”[3]

என்று தம் ‘பேராசையை’ வெளியிடுகின்றார். பராசக்தியைத் தமிழ் வாணியாகப் பாவித்து,


  1. 74. தோ.பா. 25.காளிப் பாட்டு - 1
  2. 76. தோ.பா.26 பேதை நெஞ்சே - 5
  3. 77. தோ.பா.11 காணி நிலம் - 3