பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

147


 என்று தம் பாடல்களையெல்லாம் பராசக்தி கேட்பதாய் கூறுகின்றார்.

சக்தி வழிபாடு இவர்தம் மூச்சாய் அமைகிறது.அதுவே பேச்சாகவும் இவர்தம் கவிதையில் வழிந்தோடுகின்றது.

"உயிரெனத் தோன்றி உணர்வுகொண் டேவளர்த்
தோங்கிடும் சக்திகை ஒதுகின்றோம்
பயிரினைக் காக்கும் மழையென எங்களைப்
பாவித்து நித்தம் வளர்க்கவென்றே."[1]

என்று 'வையம் முழுதும் படைத்தளிக்கின்ற' அன்னை பராசக்தியை வாழ்த்துகின்றார். பிறிதோரிடத்தில்,

"அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில் லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி ஒம்சக்திஓம்"

[2],

என்று பராசக்தியின்மீது தாம் கொண்டுள்ள நம்பிக்கையை - மன உறுதியைத் தெளிவாக்குகின்றார்.

தம் உடல்பொருள் ஆவியனைத்தையும் சமர்ப்பணமாக்கி விடுகின்றார்.[3]. இஃது ஒரு நீண்ட பாட்டு, படித்து அநுபவிக்க வேண்டியது. இன்னொரு பாடலில்,

“சக்தி சக்தி வாழீ என்றால்
சம்பத் தெல்லாம் நேராகும்;
சக்தி சக்தி என்றால் சக்தி
தாசன் என்றே பேராகும்."

[4] என்று சக்திதேவியை வாழ்த்தித் தம்மைச் சக்திதாசன் என்று கூறிக் கொள்ளுகின்றார். சக்தி என்றால் அது முக்திக்கும் வேராகும் என்பது இவர்தம் உயிராகிய கொள்கை. பிறிதொரு பாடலில்[5]சக்தியையும் தம்மையும் ஐக்கியப்படுத்திக் கொள்ளுகின்றார்.


  1. 82.தோ.பா.21,வையம் முழுதும்-4
  2. 83. தோ.பா. 17,ஓம்சக்தி - 3
  3. 84தோ.பா.23,சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்
  4. 85தோ.பா.25,சக்தி திருபுகழ் - 9
  5. 86. தோ.பா.25, சிவசக்தி புகழ்.