பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இலக்கியம்

3


புகழும் திருநெல்வேலி மாவட்டத்தில், பாளையங்கோட்டையில் பிறந்து வளர்ந்து, தமிழக மாநிலத்தில் காவல் துறையில் 38 ஆண்டுகள் அரும்பணியாற்றி 1928ஆம் ஆண்டில் ஒய்வு பெற்றவர். கடைசிக்காலப்பணி சேரன்மாதேவியில், பணிக் காலத்தில் துப்பாக்கிச் சூட்டில் முதல் நிலை பெற்றவர். 1932ஆம் ஆண்டில் ஆக்ரா தயால்பாக்கில் (உத்திரப்பிரதேசம்) வாழ்ந்த 12 ஆண்டு காலத்தில் பேராசிரியர் டாக்டர் நாயுடு அவர்கள் ஆக்ரா முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பயின்று, இந்தியில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். ஆக்ராவில் வாழ்ந்த காலத்தில், கருவிலே திருவுடைய திரு. சுப்பைய நாயுடுவின் நாட்டம் ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டது. அதில் பக்குவம் அடைந்து, நல்லோர் கூட்டுறவு அதிகமிருந்தமையால் ’சத்சங்கி’ (நல்லோர் கூட்டுறவாளர்) என்று பெருமையுடன் குறிப்பிடப்பெற்றவர். இறுதி வாழ்வு தூத்துக்குடியில் (நெல்லை மாவட்டம்) 78 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்து 1946, சனவரி 30இல் திருநாடு அலங்கரிக்கும் நிலையில் இறைவனடி சேர்ந்தார்.

திரு. சுப்பைய நாயுடுவின் கவிதைத்திறன் அவருடைய இளவயதிலேயே அரும்புவிட்டுத் தளிர்த்து வளர்ந்தது. இளவேனிற்காலத்தில் வழக்கமாய் நடைபெறும் காமன் திருவிழாவில் மிகுசிறப்புடன் நடைபெறும் ‘எரிந்த கட்சி - எரியாத கட்சி’ நிகழ்ச்சியில் ஏதோ ஒரு பக்கம் சார்ந்து நின்று. நேருக்கு நேர் கவிதையில் விவாதம் செய்து மிகுபுகழ் பெற்றவர். பொது மக்களிடம் ‘நிமிஷ கவி’ என்ற விருதினைப் பெற்றவர்.

இப்பெரியாரின் நினைவாய் இவர்தம் அருமை மகனார் பேராசிரியர் டாக்டர் நாயுடு அவர்களால் இப்பல்கலைக்கழகத்தில் நிறுவப்பெற்ற அறக்கட்டளையின் சார்பாய் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதை 81 அகவையில் உள்ள அடியேன் பெரும் பேறாய்த் கருதுகின்றேன். என்னுடைய தமிழ்ப்பணியில் அறிவியல் தாக்கம் அதிகமிருப்பதை அறிந்தவர், துறைத்தலைவர் டாக்டர் ஆர். கோபாலகிருட்டினன். அவர் அறிவியல் நோக்கில் என் பொழிவு அமைய வேண்டும் என்று விரும்பியதால் என்னுடைய இரு சொற்பொழிவுகளை