பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இலக்கியம்

7


என்ற மள்ளனார் பாடற்பகுதி விளக்குகின்றது. இதைப் போலவே வால் வெள்ளி தோன்றுவதும், சனி மீன் (கோள்?) புகைவதும், எரிகொள்ளி வீழ்தலும் தீக்குறிகளாய்க் கொள்ளப் பெற்றிருந்தன. இவற்றை,

"மைம்மீன் புகையினும் துரமம் தோன்றினும்
தென்திசை மருங்கில் வெள்ளி ஓடினும்
வயலகம் நிறையப் புதற்பூ மலர” [1]
(மைம்மீன் - சனி, துர்மம் - வால் மீன்)

என்ற பாட்டின் பகுதியால் அறியலாம். பாரியின் நாடு புன்புலமானது கண்டு வருந்தி வந்த கபிலர். அவன் மகளிர் இருந்த பார்ப்பார் மனையடைந்து தாம் கண்டதைக் கூறுகின்றார். 'இம்மகளிர்க்குத் தந்தையாகிய வேள்பாரியின் நாடு அவன் இருந்த காலத்தில் அவன் செங்கோன்மையால் மழை பிழையாது இருந்தது; சான்றோர் பலர் நிறைந்ததாய் இருந்தது; அத்தகைய நாடு இன்று ‘பெயல்பிழைப் பறியாப் புன்புலத்த தாயிற்று' என்று இரங்கிப் பாடியதே இப்பாடல்.

இதே கருத்து சிலப்பதிகாரம் நாடுகாண் காதையிலும்,

"கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்"[2]

(கரியவன் - சனி; புகைதல் - பகை வீடுகளில் சென்று மாறுபடுதல்; புகைக்கொடி -தூமகேது)

என்ற அடிகளால் அறிகின்றோம். 'சனி புகைதலாவது இடபம், சிங்கம், மீனம் இவற்றோடு மாறுபடுதல்; இவற்றுள் சனி தனக்குப் பகை வீடாகிய சிங்க ராசியிற் புகின் உலகிற்குப் பெருந்தீங்கு விளைவிப்பான் என்பதை மகத்திற் புக்கதோர் சனி எனக் காணாய் (தேவாரம் 7.54:9) என்பதனால் உணர்க.[3] தூமம் புகைக்கொடி என்றும் கூறப்படும்; தூமகேது என்பதுவும் இதுவே: வட்டம், சிலை, நுட்பம், தூமம் என்னும் கரந்துறைகோள்கள் நான்கனுள் ஒன்று; இதன் தோற்றம்


  1. 6. புறம் 117, அடி 1-3

  2. 7. சிலப்.10; அடி 102-3
  3. 8. விண்மீன்களுள் மகம், பூரம், உத்திரத்தின் முதல் கால்பாகம் ஆகியன சிங்கராசிக்கு உரியவை.