பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இலக்கியம்

9


வேந்தன் உயிர் நீப்பன் என்று உணர்ந்தார். அந்த வேந்தன் தம்மை ஆதரித்த கோச்சேரமான் யானைக்கண்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பானாக இருந்ததனால் கலக்கம் எய்தினார். அவர் கலங்கியவாறே ஏழாம் நாளில் சேரமான் விண்ணாடு புக்கான். இதற்கு அறிகுறியாய் “உற்பாதங்களாய் - யானைகள் கையை நிலத்தே நீட்டி வைத்து உறங்கின; முரசும் தானே கண் கிழிந்து போயிற்று; வெண் குற்றக் குடை கால் துணிந்து வீழ்ந்தது; குதிரைகள், செல்லும் கதியின்றிக் கிடந்தன. இத்தி நிமித்தங்கள் வேந்தனின் இறுதியை வலியுறுத்தின. இவற்றால் மனம் அழுங்கிய கவிஞர் பெருமான் இந்நிகழ்ச்சிகளை ஓர் அழகிய பாடலில் எடுத்தோதி மனம் வெதும்புகின்றார். அந்த அழகிய பாடல் இது :

“ஆடிய அழல்குட்டத்து
ஆரிருள் அரை இரவின்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயம்காயப்
பங்குனியுயர் அழுவத்துத்
தலைநாண்மீன் நிலைதிரிய
நிலைநாண்மீன் அதனெதிர் ஏர்தரத்
தொல்நாண்மீன் துறைபடியப்
பாசிச் செல்லா தூசி முன்னாது
அளக்கர்த்திணை விளக்காகக்
கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பி னானே
அதுகண்டு, யாமும் பிறரும் பல்வேறு இரவலர்
பறையிசை அருவி நன்னாட்டுப் பொருநன்
நோயில னாயின் நன்றுமற் றில்லென
அழிந்த நெஞ்சம் அடியுளம் பரப்ப
அஞ்சினம்; எழுதாள் வந்ததன்று இன்றே
மைந்துடை யானை கைவைத்து உறங்கவும்
திண்பிணி முரசம் கண்கிழிந்து உருளவும்
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்
காலியற் கலிமாக் கதியின்றி வைகவும்
மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
ஒண்டொடி மகளிர்க்கு உறுதுணை யாகித்
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ