பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

11


உத்தரம். நிலை நாண்மீன் - எட்டாம் மீன்: “உச்சிமீனுக்கு முன் எட்டாவது அத்தமித்தலும் பின் எட்டாவது மீன் உதித்தலும் இயல்பு”, “உச்சிமீனுக்கு எட்டாம் மீன் உதயமீன்” என்று சொல்லுவர். தொன்னாண்மீன் - எட்டாம் மீனாகிய மிருகசீரிடம். ‘பாசி’ என்பது கிழக்குத் திசையையும் ‘ஊசி’ என்பது வடக்குத்திசையையும் குறிக்கின்றன. “பங்குனித்திங்களில் நட்சத்திரம் வீழின் இராசபீடை” என்பது மக்கள் நம்பிக்கை. “ஆடுகயல் தேள்தனு சிங்கத் தெழுமீன் வீழுமேல் அரசழிவாம்” என்று மற்றொரு நம்பிக்கை. கயமாகிய குளம் என்றது கயக்குளம் என்பதாகும். அஃதாவது, புனர்பூசம். இது குளம் போலும் வடிவையுடையது. இதுபற்றியே பிங்கலந்தை (நிகண்டு)யும் “அதிதிநாள் கழையா மண்மேரி, புனர்தங் கரும்பிவை புனர்பூச மாகும்” என்று கூறியுள்ளது.

இதுகாறும் கூறியவை சோதிடக் கலையின் அடிப்படையில்தான். இதன் வளர்ச்சிபற்றிச் சிறிது கூறுவேன்: பண்டைக் காலத்தில் பூமியைச் சூரியன் சுற்றுவதாய் நம்பிக்கை இருந்து வந்தது. அறிவியல் வரலாற்றாலும் கலிலியோ என்ற அறிவியல் அறிஞரும் இக்கருத்தைக் கொண்டிருந்தார் என்பது அறியக்கிடக்கின்றது.

சூரியன் பூமியைச் சுற்றும் பாதையை இராசி மண்டலம் என்று வழங்குவர். சோதிடர் சதுரமாய்க் கட்டம் அமைத்து. அதில் நான்கு பக்கங்களிலும் அடியிற்கண்டவாறு நான்கு வீடுகள் அமைப்பர்.

சுற்று வழி வட்டமாய் இருப்பதால் அதனை வட்டமாய் அமைத்து, அதனைப் பன்னிரண்டு பகுதிகளாய்ப் பிரித்துக் காட்டுவதே முறை. ஒவ்வொரு பகுதியும் 30° அமைந்த வட்டக்-