20
அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்
தொக்கபேர் அண்டங்கள் - கொண்ட
- தொகைக்கெல்லை இல்லையென்று சொல்லுகின்ற
தக்கபல் சாத்திரங்கள் - ஒளி
- தருகின்ற வானமோர் கடல்போலாம்:
அக்கடல் அதனுக்கே - எங்கும்
- அக்கரை இக்கரை பொன்றிலவாம்.
இக்கடல் அதனகத்தே - அங்கங்
- கிடையிடைத் தோன்றும்புன் குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள் - திசைத்
- தூவெளி யதனிடை விரைந்தோடும்;
மிக்கதோர் வியப்புடைத்தாம் - இந்த
- வியன்பெரு வையத்தின் காட்சிகண்டீர்.”27
என்று வியன்பெரு வையத்தின் காட்சியைக் காட்டுவார். இந்த இருவரின் கருத்துகளும் ஒருபுடை யொத்துள்ளமையைக் கண்டு மகிழலாம்.
பாரதியாரின் மற்றொரு பாடல், கண்ணன் காண்டீபனுக்குக் காட்டிய விசுவரூப தரிசனம் போல், பரவெளியில் உள்ள அண்டகோளங்களை ஒருங்கே காட்டுகின்றது. இந்த அண்ட கோளங்களின் அமைப்பை,
"விண்டு ரைக்க அறிய அரியதாய்
- விரிந்த வான வெளியென நின்றனை;
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;
- அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை;
மண்ட லத்தை அணுஅணு ஆக்கினால்
- வருவ தெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை;
- கோல மே! நினைக் காளியென் றேத்துவேன்".28
என்று விளக்குவதுடன் அவற்றிடையே யுள்ள தொலைவுகளையும் கற்பனை மூலம் கணக்கிட்டுக் காட்டுவர். ஒரு மண்டலத்தைப் பொடியாக்கி, அந்தப் பொடிகளையும் அணுக்களாக்கினால் வரும் தொகை எவ்வளவோ அவ்வளவு தூரத்தில்
27. பார.கவி.தோத்.பா. கோமதியின் மகிமை - 5, 6, 7
28. பார்.கவி.தோத்.பா. மஹா சக்தி வாழ்த்து