பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



நெடும்பாட்டால் நெஞ்சு நெகிழும் வண்ணம் கட்டினேன் இங்ஙனமாய் என் முதற்பொழிவை,


"மனமெனும் தோணி பற்றி
மதியெனும் கோலை யூன்றிச்
சினமெனும் சரக்கை ஏற்றிச்
செறிகடல் ஒடும் போது
மதன்எனும் பாறை தாக்கி
மறியும்போது) அறிய ஒண்ணாது
உனையுனும் உணர்வை நல்காய்
ஒற்றியூர் உடைய கோவே”[1]


என்ற அப்பர் சுவாமிகளின் தேவாரப் பாடலுடனும்,


"செந்தழலே வந்து அழலைச்
செய்திடினும் செங்கமலம்
அந்தரம்சேர் வெங்கதிரோற்கு
அல்லால் அலராவால்,
வெந்துயர்வீட் டாவிடினும்
வித்துவக்கோட் டம்மா! உன்
அந்தமில்சீர்க் கல்லால்
அகம்குழைய மாட்டேனே”[2]


என்ற குலசேகரப்பெருமாளின் திருவித்துவக்கோட்டு அம்மானின் திருப்பாசுரத்துடனும் இன்றைய பொழிவை நிறைவு செய்கின்றேன்.

வணக்கம்.


  1. 75. தேவாரம் (அப்பர்) : 4.46:2
  2. 77. பெருமாள் திருமொழி 5 : 6