பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

69



தந்தத்தில் ஊசி செய்தல் போன்ற கைவினைப் பொருள்களைச் செய்யும் கைத்திறனை வளர்த்துக்கொண்டான். கைவினைத் திறனின் அடிப்படையில் தொழில் நுட்ப அறிவு வளர்ந்திருக்க வேண்டும்.

(6) உயிரியல், மருத்துவம் : உடற்கூறுபற்றிய கருத்து தெளிவாய் இல்லையாயினும் உடலைப்பற்றிய சிறிய அநுபவ அறிவு இருந்தது. உணவு செரிமானம் இல்லாதபோது பட்டினி போடுதல், சில வகை கஷாயம் தயாரித்து அருந்துதல், இலேகியம் முதலிய சத்துப்பொருள் செய்து உண்ணல், சூர்ணம் போன்ற பொடி செய்தல் முதலிய முறைகள் தோன்றின. நம் நாட்டு மருத்துவ முறைகளாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி முறை ஆகியவை யாவும் அநுபஅறிவின் அடிப்படையில் தொகுக்கப்பெற்ற முறைகளாகும். காலப்போக்கில் சில நோய் உயிர் அணுக்கள்தாம் (Bacteria) நோய்களுக்கும் காரணம் என்பது தெளிவாய் அறியப்பெற்றது. இன்று தொற்று நோயைத் தோற்றுவிக்கும் நச்சுக் கிருமிகள் (Virus) தாம் பல்வேறு நோய்கட்குக் காரணம் என்பதைக் கண்டறிந்துள்ளனர். உயிரியல் துறையின் வளர்ச்சியால் மருத்துவத்துறையில் மேலும் வளர்ச்சி காணப்பெற்றது.

(7) தொழிலியல் : ஆதியில் எல்லாப் பொருள்களும் ஆண்டவனால் படைக்கப்பட்டவை என்று மனிதன் கருதினான். காலப்போக்கில் அவன் கைவினைப்பொருள்களைப் படைத்துப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கினான். வில், அம்பு போன்ற சில ஆயுதங்கள், சிலவகை அணிகள் செய்யத் தெரிந்து அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கற்றுக் கொண்டான். காகிதம் செய்தல், மரத்தாலாய ஏர் முனையில் பொருத்தும் இரும்பினாலாய கொளு செய்தல், எண்ணெயில் எரியும் விளக்குகள் செய்தல், அச்சிடும் முறை, நெருப்பினாலும் பகலவன் வெப்பத்தாலும் சுடுமண் (செங்கல்) செய்தல், சாயம் தயாரிக்கும் முறை, ஓவியம் வரைதல், மண்பாண்டங்கள் செய்தல், தந்தத்தில் ஊசி செய்தல், பாய் முடைதல், துணி நெய்தல், கோணி நெய்தல், நாணயம் செய்தல் போன்றவற்றில் முன்னேற்றம் கண்டிருந்தான். இந்த அறிவியல் அறிவுக்கான அடிச்சுவடுகள் மொகஞ்சதாரா, ஹரப்பா என்ற இந்திய நாகரிகத்திலும், தென் அமெரிக்காவில் உள்ள மாயா, மத்திய ஆசியா போன்ற இடங்களில் கண்டறியப்பெற்ற நாகரிகங்களால் அறியக் கிடக்கின்றன. நம் நாட்டுத் திருமறைக்கால