பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



நாகரிகத்திலும், சிந்து வெளி நாகரிகத்திலும் இத்தகைய அடிச்சுவடுகள் காணப்பெறுகின்றன.

அசோகர் காலத்தில் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு) இரும்பை உருக்கும் தொழில் வளர்ந்திருந்தது. இன்றும், அவர் அமைத்த ‘அசோகர் தூண்’ நிலைத்து, சான்று பகர்வதாய் உள்ளது.

தொழில் நுட்பத்தைக் கூற வேண்டுமானால் அச்சிடும் இயந்திரங்களைக் குறிப்பிடலாம். உலக வரைபடங்கள், காலங்காட்டிகள் (Clocks), அகலம், நீளம், உயரம் போன்ற அளவை முறைகளும், கடலின் ஆழத்தை அளக்கும் பாதம் (= 6 அடி) அளவுகளும், எடை முதலியவற்றைத் துல்லியமாய் அளக்கும் முறைகளும் பையப் பைய வளர்ந்தன.

(8) கணிதம் : மனிதர்கள் எண்ணும் முறையில் முதன் முதலாய் மணிகளைப் பயன்படுத்தக் கற்றனர். தமிழர்கள் க, உ, ங, ச, ரு, சர, எ, அ, கூ, ய (க)

என்ற எண் முறைகளைப் பயன்படுத்தினர். நாளடைவில், கணிதத்தில் 1, 2, 3, 4...... 10 என்ற அரேபிய எண்களைப் பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது. நம் நாடுதான் சூனியக் குறியீடு (சுழி) கண்ட பெருமையைப் பெற்றதாய் வரலாறு குறிக்கின்றது. பாபிலோனியாவில் இயற்கணிதம் (Algebra) தோன்றியதாய் வரலாறு உண்டு. உறையுள் அமைத்துக்கொண்ட காலத்திலேயே வடிவ கணிதத்திற்கு (Geometry) வித்திட்டுவிட்டதாய்க் கருதலாம். தொடர்ந்து கோண கணிதமும் (Trigonometry) தோன்றலாயிற்று. எண்ணிக்கைகளின் அடிப்படையில் கணக்கிடும் முறை வளர்ந்த காலத்தில் பின்னக்கணக்கும் தோன்றியது. நம் நாட்டு ‘எண் சுவடி’ என்ற நூலில் பின்னக் கணக்கில் முந்திரி அரைக்காணி போன்ற கணக்கிடும் முறைகள் இருந்தன என்பதை அறிகின்றோம்.

பிற்காலத்தில் கூட்டல் (+), கழித்தல் (-), பெருக்கல் (x), வகுத்தல் (+) குறிகளும் பிற பல குறியீடுகளும் வழக்கத்திற்கு வரலாயின; இவை கணித வளர்ச்சிக்கு அடிப்படைகளாயின. தொலைநோக்கி, நுண்நோக்கி போன்ற கருவிகள் புனையப்பெற்று வானியல், உயிரியல் போன்ற துறைகளின் வளர்ச்சியை ஓங்கச்செய்தன. உரோமன் எண்கள், இந்திய அரேபிய எண்கள் ஏற்றுக்கொள்ளப்பெற்றன. இக்கால கட்டத்தில் இந்திய நாட்டின் பங்காய் அறிவியல் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கதொன்றுமில்லை.