பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


தேயு அப்பு

 பிருதிவி


சூக்கும பூதம் ஒவ்வொன்றும் இரு செம்பாகங்களாய்ப் பிரிகின்றன. ஒரு பாதி தன்னுடைய தூல அமைப்புக்கு நின்றுவிடுகின்றது. மற்றொரு பாதி, நான்கு அரைக்கால் ஆகி, ஏனைய நான்கு பூதங்களுக்குச் சமனாய்ப் பங்கிட்டுக் கொடுக்கப்பெறுகின்றது.


இங்ஙனம் சூக்கும பூதங்கள் தூல பூதங்களாய் மாறுவதைப் ‘பஞ்சீகரணம்’ என்று திருநாமம் இட்டு வழங்குவர்.

கீதையில் கண்ணன் “மண், நீர், தீ, காற்று, வானம், மனம், புத்தி, அகங்காரம் என்று இங்ஙனம் எட்டு விதமாய் என் பிரகிருதி பிரிவுபட்டு உள்ளது.”14[1] என்கின்றான்.

முதல் ஐந்தனை மேலே விளக்கினேன். உணரும் தன்மை மனத்திற்கு உண்டு. நல்லது, தீயது என்று புத்தி பாகுபடுத்து-


  1. 14. கீதை 7 : 4