பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கடிகாரத்தின் 12 மணி நடுப்பகலைக் காட்டுமாறு கடிகாரத்தை முன்னிரவிலேயே திருப்பி வைப்பது வழக்கம். இதற்குக் கப்பல் மணி என்று பெயர்.

மண்டல நேரம்

பெரிய நாடுகளில் மண்டல நேரங்கள் (Zone times) பயன்படுகின்றன. ஒவ்வொரு மண்டலமும் 15 அல்லது ஒரு மணி வித்தியாசமுள்ள இரண்டு தீர்க்க ரேகைகளை வரம்பாகக் கொண்டது. ஒவ்வொரு மண்டலத்திலும் அதன் மத்தியிலுள்ள தீர்க்க ரேகையின் சராசரி காலம் அதன் மண்டல காலமாகக் கருதப்படும்.

கோடை நேரம் (Summer t. ) :

சில நாடுகளில் கோடைக் காலத்தில் கடிகார நேரத்தை ஒரு மணியோ அல்லது அரை மணியோ மிகையாகத் தள்ளி வைப்பது வழக்கம். இதற்குக் கோடை நேரம் என்று பெயர்.

ஆண்டுகள்

உலகம் சூரியனைச் சுற்றி வர ஆகும் நேரத்தை ஒர் ஆண்டு என்கிறோம். ஆண்டின் தொடக்கத்தைக் குறிப்பிட, சூரிய வீதியில் பூமி எந்த இடத்திலிருந்து புறப்படுகிறது என்பதை முடிவு செய்ய வேண்டும்.