பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

அயன ஆண்டு

நில நடுக் கோடு செங்கதிர் வீதியை வெட்டும் புள்ளியிலிருந்து உலகம் தன் பயணத்தைத் தொடங்குவதாகக் கருதுவதுண்டு. அப்புள்ளியிலிருந்து புறப்பட்டு மீண்டும் அவ்விடத்திற்கு வங்து சேர ஆகும் காலத்தை அயன ஆண்டு (Tropical year) என்பார்கள். மாறி வரும் பருவங்கள் ஓர் அயன ஆண்டில் முடிவடைந்து மறுபடியும் ஆரம்பிக்கின்றன. ஓர் அயன ஆண்டு (365.2422 சராசரி செங்கதிர் நாள்கள் (சு. 365¼ நாள்கள்) கொண்டதாகும்.

உலகின் பயணத்தை விண்மீன்களை ஒட்டி முடிவு செய்து, அதற்கேற்பக் கணக்கிடும் ஆண்டு விண்மீன் (நட்சத்திர) ஆண்டு எனப்படும்.

நாள்மிகை ஆண்டு

நடைமுறை ஆண்டின் மொத்த நாள்கள் பின்னமில்லாமல் முழு நாள்களாக இருக்க வேண்டும். மேலும் பருவங்களை ஒட்டியும் இருக்க வேண்டும். அயன ஆண்டு பருவங்களை ஒட்டியிருந்தாலும் முழு எண்ணிக்கை நாள்கள் கொண்டதல்ல. ஆகையால் சிவில் ஆண்டின் மொத்த நாள்கள் 365 என்று வைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கால் நாள் வேறுபாட்டை ஈடு