பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

செய்வதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறை ஆண்டை 366 நாள்களாகக் கொள்கிறோம்.

இதற்கு நாள்மிகை ஆண்டு (Leap year) என்று பெயர். இம்முறைக்கு சூலியன் பஞ்சாங்கம் என்று பெயர். ஆனால் இதற்கும் அயன ஆண்டிற்கும் உள்ள வித்தியாசம் கால் நாளைவிட சிறிது குறைவாக இருப்பதால் நானூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்று நாள்மிகை (லீப்) ஆண்டுகளை விட்டுவிடுகிறார்கள்.

நடைமுறையில் ஓர் ஆண்டின் எண்ணிக்கை நான்கால் வகுபடுமாயின் அதை நாள்மிகை ஆண்டாகக் கொள்கிறோம். அந்த நாள்மிகு ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் 28 நாள்களுக்குப் பதிலாக 29 நாள்கள் இருப்பதாக வைத்துக் கொள்கிறோம். ஆனால் ஓர் ஆண்டின் எண்ணிக்கை, முழு நூற்றாண்டுகளாயிருந்தால் கடைசி இரண்டு சுழியை ஒதுக்கி மிச்ச எண்கள் நான்கால் வகுக்கப்படுமாயின் நாள்மிகு ஆண்டு இல்லாவிடில் நாள் மிகா ஆண்டு எனப்படும்.