பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

சாய்ந்து தீர்க்கரேகையில் இருக்கும் ஞாயிறு காலையில் கிழக்கே தோன்றி நகர்ந்து, மேற்கில் மறையும் வரையில் ஊசியின் நிழலும் திசைமாறித் தகட்டில் விழும். தகட்டில் அளவு கோடிட்டுக் காலத்தை அளவிடலாம்.

நிலைக்குத்து நிழற்கடிகாரம் (vertiest S.)

தகடு தட்டையாகவோ, படுக்கையாகவோ இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அது எவ்வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஐரோப்பிய வரலாற்று இடைக்காலத்தில் கிறித்தவக் கோயிற் கோபுரங்களில் நிலைக்குத்து நிழற்கடிகாரம் அமைத்திருந்தனர். இடம் விட்டு இடம் கையில் எடுத்துச் செல்லக் கூடிய வளைய நிழற் கடிகாரம் (Rings.) 17, 18-ஆம் நூற்றாண்டில் பயன்பட்டது. நிழற்கடிகாரம் சரியான காலத்தைக் கூடுமானவரை துல்லியமாகக் காட்டும்.

மணற்கடிகாரம் (Sand glass)

இதில் குறுகிய இணைப்பையுடைய இரு கூம்பு வடிவக் கண்ணாடிக் கூடுகள் உடுக்கை வடிவில் அமைந்துள்ளன. இதனுள்உள்ள உலர்ந்த மணல் ஒரு கூட்டிலிருந்து மற்றொன்றில் ஒரே சீராக விழும். இவ்வாறு மணல் விழப் பிடிக்கும் கேரத்தைக் கொண்டு காலத்தை அளந்தனர்.