பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

1348-இல் தோவர் கோட்டையில் அமைக்கப்பட்ட கடிகாரமும் மிகப் பழமையானது. இவை இன்னும் வேலை செய்கின்றன. இவற்றை சவுத் கென்சிங்ட்டன் பொருட்காட்சி சாலையில் வைத் துள்ளனர். இக்கடிகாரங்களிலுள்ள சிறப்பான உருளை (Crown Wheel) C-இன், ஒரங்களிலும் P1P2 என்ற இரு முளைகள் (Pallets) உண்டு.

இவ்விரு முளைகளும் ஒரு கெட்டித் தண்டில் பொருத்தப்பட்டிருக்கும். கெட்டித் தண்டின் உச்சியில் ஒரு புயம் தாங்கப்படும். இப்புயத்தில் இரு முனைகளிலும் W. W. என்ற எடைகள் உண்டு. மையத்திலிருந்து இந்த எடைகளின் துரத்தைப் பொறுத்து மெதுவாகவோ விரைவாகவோ இது ஊசலாடும்.

ஊசலாட்டத்தின் பயனாக சிறப்புப் பல் உருளை இயங்குகிறது. இவ்இயக்கத்தினால், முளையின் மூலம் கெட்டித் தண்டுக்கு விசை கொடுக்கப்படுகிறது. இதனால் ஊசலாட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. தலைமைப் பல் உருளை இயங்குவதால் கடிகாரம் வேலை செய்கிறது.

1582இல், பீசா நகரக் கோயிலில் தொடரி (சங்கிலி)யால் தொங்க விடப்பட்டிருந்த விளக்குகளைக் கண்ட, காலீலியோ (Galileo) கடிகாரத்தில் ஊசல் குண்டினைப் (பெண்டுலம்) பயன்படுத்