பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

தடுக்கி (Escapement) என்ற எந்திரப் பகுதியே கடிகாரத்தில் விசையைப் பெண்டுலத்திற்குக் கொடுத்துப் பல் உருளைகளை இயக்குகிறது.

கடிகாரத்தின் ஊசல் குண்டுகள் :

எடையற்ற கயிற்றில் தொங்கும் ஒரே புள்ளியில் உள்ள எடையை உடைய அமைப்பே மிகச் சிறந்த தனியான ஊசல் குண்டு (Simple pendulum) ஆகும். இத்தகைய குண்டு கற்பனையே தவிர உண்மையில்லை. கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் ஊசல்குண்டுகள் கூட்டுக் குண்டுகள் (Compound p) .எனப்படும்.

பொதுவாக அடியில் கனமான குண்டுடன் உள்ள மாழை (உலோக)க் கம்பி எஃகு வில்லில் தொங்கவிடப்பட்டிருக்கும். குண்டின் புவி ஈர்ப்பு மையம், ஊசல் குண்டின் அலைவு மையம் (Centre of oscillation) ஆகும்.

அலைவு மையத்திற்கும், தொங்கு மையத்திற்கும் (Centre of suspension) இடைப்பட்ட தொலைவு ஊசல் குண்டின் நீளம் 1 ஆகும். நில ஈர்ப்பு விசையால் ஏற்படும் விரைவு வளர்ச்சி g எனப்படும். செங்குத்துக் கோட்டிலிருந்து அலைவுக் கோணம் a. ஆனால் ஊசலாட்ட நேரம்

T =2π √1/g  (1 + a2/16) ஆகும்.அ. கா.-2