பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

சாதாரணமாகக் கணிக்கும்போது 8 கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. நேரத் தைத் துல்லியமாகக் காட்ட அமைக்கப்படும் கடிகாரங்களில், நீளத்தை ஒரே சீராக இருக்குமாறு அமைத்து, ஊசலாட்ட நேரத்தை நிலையான தாக்குவார்கள். ஊசலாட்ட நேரத்தைத் தட்ப வெப்ப நிலைகளாலும் மாறுபடாமல் நிலையான தாக்கப் பல முறைகள் கையாளப்படுகின்றன.

பாதரச ஊசற் குண்டு :

இதன் குண்டுத் தண்டு இரும்பாலானது. பாதரசமுள்ள கண்ணாடி அல்லது இரும்புக் குப்பியே குண்டு ஆகும். வெப்பத்தால் தண்டு கீழ் நோக்கி நீள்கிறது. அதே வெப்பத்தால் 'குப்பியிலுள்ள பாதரசம் விரிவதால் அதன் மட்டம் உயர்கிறது. இவ்வாறு உயர்வதால், ஊசல் தண்டின் நீளத்தில் ஏற்பட்ட மாறுபாடு ஈடு செய்யப்படுகிறது.

ஆரிசனின் இரும்புச் சட்ட ஊசற்குண்டு (Harrison's grid iron Pendulum) மற்றொரு வகை. இதில் பல கம்பிகள் உண்டு. ஒற்றைப்படை எண்ணுள்ளவை இரும்புக் கம்பிகள். அவற்றையடுத்த இரட்டைப்படை எண்ணுள்ளவை பித்தளைக் கம்பிகள்.