பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

இரும்பு பித்தளைக் கம்பிகளின் மொத்த நீள விகிதம் 19:11. இரும்புக் கம்பிகளின் கீழ்நோக்கிய விரிவைப் பித்தளைக் கம்பிகளின் மேல்நோக்கிய விரிவு ஈடு செய்யும்.

இன்வார் பெண்டுலம் :

அண்மையில் இன்வார் (Inwar) எனப்படும், 36% நிக்கல் கலந்த எஃகு மாழை (உலோக)க் கலவை கண்டுபிடிக்கப்பட்டது. இன்வார் மாழைக் கலவையால் செய்யப்பட்ட ஊசல் தண்டுகள் பேரளவில் பயன்படுத்தப்படுகின்றன. இக்கல வையினாற் செய்யப்பட்ட தண்டின் நீளம் வெப்பத்தால் மாறுவதில்லை. இன்வார் ஊசல் தண்டில் காரீயக் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

கடிகார விட்டுத்தடுக்கிகள் :

ஊசல் தண்டு தனது விசையைக் கடிகாரத்திலிருந்து விட்டுத்தடுக்கி மூலமாகப் பெறுகிறது. முதலில் (1675) இவ் விட்டுத்தடுக்கி நங்கூர வடிவில் இருந்தது. P, F என்பன இரு முளைகள். அடிப்படைக் கவை முள்ளினாலும் (Crutch and a fork) விட்டுத்தடுக்கி பெண்டுலத்துடன் இணைக் கப்பட்டிருக்கும்.