பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



28

வும், வெப்பநிலையை ஈடு செய்து ஊசலாட்டி நேரத்தைச் சரியாக வைக்கவும் விளிம்பில் பல திருகுகள் உண்டு.

காலமானியில், மற்றொரு முறை கையாளப்படுகிறது. பிளக்கப்பட்ட விளிம்பின் ஒவ்வொரு பகுதியிலும் நகர்த்தப்படக் கூடிய ஓர் எடை உண்டு.


உருளைத் தொடரின் இயக்கம் :

கடிகாரத்தில் சேமித்து வைக்கப்பட்ட ஆற்றல் ஒழுங்கான இடைவேளையுடன் ஒரே சீராக விடுவிக்கப்படுவதால், கடிகாரத்திலுள்ள உருளைத் தொடர் இயக்குவிக்கப்படுகிறது.

பொதுவான கடிகாரங்களில் W என்ற எடை, ஒரு கப்பியில் கயிற்றினால் தொங்க விடப்பட்டிருக்கும். கயிற்றின் ஒரு முனை A என்ற நிலையான புள்ளியில் பொருத்தப்பட்டிருக்கும். அக்கயிறு குழாயின்மீது பன்முறை சுற்றப்பட்டு, அதன் மறுமுனை குழாயில் பொருத்தப்பட்டிருக்கும்.

சாவியைப் பயன்படுத்தி ஏற்ற திசையில் சுற்றி, எதிர்த்திசையில் சுற்றாவண்ணம் R என்ற பற்சக்கரத்தில் பதிந்துள்ள தடுக்கி (Click) C ஆல்