பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

சரிப்படுத்திக் கடிகாரங்கள் சரியான காலத்தைக் காட்டுமாறு செய்யலாம். இவ்வகை மின் கடிகாரம் மிகத் துல்லியமாக (நூறு கோடியில் ஒன்றுக்குச் சரியாக)க் காலத்தைக் காட்டுகிறது.

நான்காம் வகையாக அணு ஊசலாட்டத்தைப் பயன்படுத்தி இயக்கப்படும் கடிகாரங்கள் மிக அண்மையில் பயனுக்கு வந்துள்ளன. இவ்வகைக் கடிகாரங்கள் மிக மிகத் துல்லியமாகக் காலத்தைக் காட்டுகின்றன. அம்மோனியா வாயுவின் உயர்ந்த அதிர்வைக் குறைத்து, இவற்றில் உந்து இயக்கப்படுகிறது. இவை அணுக் கடிகாரங்கள் (Atomic Clocks) எனப்படும்.

இந்தியாவில் கடிகாரத் தொழில் இன்னும் சரியாக வளர்ச்சி அடையவில்லை. 1926லிருந்து கோபுரக் கடிகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநிலக் கல்லூரியிலும், வால்ட்டேரில் ஆங்திரப் பல்கலைக்கழகக் கட்டடத்திலும் உள்ள கோபுரக் கடிகாரங்கள் இந்தியாவிலேயே செய்யப் பட்டவை.

கோயம்புத்துாரிலுள்ள ஜி. டீ. நாயுடுவின் தொழிற்சாலைகளிலும், டாட்டா நகர், கல்கத்தா, பம்பாய், பூனாவிலுள்ள சில தொழிற்சாலைகளிலும் கடிகாரங்கள் 1942 முதல் செய்யப்படுகின்றன. கடந்த இருபதாண்டுகளில் பல நிறுவனங்கள் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப புதியப் புதிய கடிகாரங்களைச் செய்கின்றன.