பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

உலகிலேயே மிகப் பெரிய கடிகாரம் : நியூயார்க் நகரிலுள்ள ’கால்கேட் கடிகாரம்’ உலகிலேயே மிகப் பெரிய கடிகாரமாகும். இது வாரன் தேவி (Warren Davey) என்ற அமெரிக்க எஞ்சினியரால் செய்யப்பட்டது. இது 1-12-1924 நண்பகலிலிருந்து வேலை செய்து வருகிறது.

இக் கடிகாரத்தின் முகம் (Dial) 50 அடி விட்டமுள்ளது. முகத்தின் பரப்பு 1,963 ச. அடி. இக் கடிகாரத்தின் முட்கள் ஒட்டுப் பலகையால் செய்யப்பட்டு எஃகினால் பலப்படுத்தப்பட்டவை. கடிகாரத் தண்டுகள் இணைக்குமிடத்தில், முட்கள் வெண்கலக் கூட்டினுள் செருகப்பட்டிருக்கின்றன.

பெரிய முள் 10 மீட்டர் நீளமுள்ளது; 51 மி. மீட்டர் கனமுள்ளது; 1,100 கிலோ எடையுள்ளது. சிறிய முள்ளின் நீளம் 7 மீட்டர். இதன் எடை 862 கிலோ. இரண்டு முட்களின் மொத்த எடை 1962 கிலோ; அதாவது கிட்டத்தட்ட 2 டன். பெரிய முள்ளின் முனை நிமிடம் ஒன்றுக்கு 80 மீட்டர் வீதம் நகர்கிறது.

இக் கடிகாரத்தின் பெண்டுலம் 3 மீட்டர் நீள முள்ளது. இது மின்சாரத்தால் இயக்கப்படுகிறது. மின்சாரம் தடைப்பட்டாலும் மின்கல அடுக்குகளினின்றும் மின் ஆற்றலைப் பெற்று