பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

நான்கு நாட்கள் வரை நிற்காமல் வேலை செய்யுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

வெகு தொலைவிலிருந்தும் இக் கடிகாரத்தைப் பார்த்து மணியை அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் பொருட்டு, முகப்பில் எண்களோ, நிமிடத்தைக் காட்டும் கோடுகளோ எழுதப்படவில்லை.

எண்களுக்குப் பதிலாக 2 மீட்டர் உயரம், 74 மி. மீட்டர் அகலத்திலுள்ள கருநிறக் கோடுகள் மட்டுமே உண்டு. இரவிலும் காலத்தைக் காட்ட எற்றவாறு 345 விளக்குகள் கடிகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.