பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் காலப்பகுப்பு

தமிழர்கள் உலகம் ஐம்பூதத்தால் ஆனது என்று தெரிந்து தெளிந்தவர்கள். வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டே இயற்கையை உற்று நோக்கிப் பருதியின் போக்கையும் திங்களின் வரவையும் - வளர்தல் தேய்தலையும் கண்டு நாள், வாரம் (கிழமை), திங்கள் (மாதம்) என்று காலங்களைப் பகுத்தனர்.

காற்றும் மழையும் பனியும் வெயிலையும் கொண்டு, தம்மைச்சூழ்ந்த இயற்கையின் மாற்றங்களையும் தோற்றங்களையும் கண்டு, ஆண்டின் சுழற்சி வளையத்தை அறிந்தனர்.

மலரும் மலர்களைக் கொண்டும், புள்ளினத்தின் குரல் ஒலியைக் கொண்டும், நேரத்தை உணர்ந்து உணர்த்தினர்.

மதியத்தின் (நிலவு) வளர்ச்சி 14 நாள்களைக் கணக்கிட்டு ஒளிப்பக்கம் (சுக்கில பட்சம்) என்ற கா.-3)