பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

பொழுது அளவீடுகள்

ஓர் ஆண்டின் அறுபருவத்தை இரண்டிரண்டு மாதமாக்கி பெரும்பொழுது என்றனர். முதலில் பொழுது என்பது ஒரு பகல்-இரவினையே குறித்தது. பருவ மாற்றம் தெற்றெனப் புலப் படுத்தியதால் பருவத்தைக் குறிக்கப் பெரும் பொழுது என்றனர்.

ஒரு முழு காளினை ஆறு கூறிட்டுப் பத்து காழிகை ஒரு காலமாக்கிச் சிறுபொழுதென்றனர். அவை மாலை, யாமம், வைகறை, காலை, கண்பகல், எற்பாடு என ஆறாம். அவை ஞாயிறு மறையும் காலங்தொட்டுப் பப்பத்து நாழியாக முறையே வரும். இவ் வழக்கு சங்க காலத்தில் இருந்தது; பின்னர் வழக்கிழங்தது.

பல வண்ணப் பூக்களும் பகலில் மலரும் வெண்மலர்கள் அனைத்தும் இரவில் மலரும்: ஒவ்வொரு பூக்கள் அரும்பைக் கொண்டும், மொட்டைக் கொண்டும் (போது) மலர்ந்த நிலை யைக் கொண்டும் பொதுமக்கள் காலத்தைத் தெரிந்து கொண்டனர். போதால் அழிந்ததனால் 'பொழுது'எனப்பட்டது.

விடியற் காலத்தைச் சேவல் கூவலிலிருந்தும், மற்ற பறவைகள் ஒலியெழுப்புவதினின்றும் நேரத்தை அறிந்தனர். வானில் வியாழன், வெள்ளி முதலிய கோள்களின் நிலைப்பாடுகளிலிருந்தும்,