பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

பகலில் தங்கள் நிழலின் நீட்டத்தைக் கொண்டும் நேரத்தை அறிந்தனர்.

மாலைப் பொழுதையும் இரவையும் மலர்கள் மலர்வதினின்றும் அறிந்தனர். பறவைகள் கூடு திரும்புவதும், கன்று காலிகள் கொட்டில் திரும்புவதும் கொண்டு இருவாட்சி (இருள்+ஆட்சி) போன்ற மலர்கள் பூப்பதும் கண்டும், வானில் பிறை, விண்மீன் கண்டும் வீடுகளில் விளக்கேற்றுவர்.

மன்னர் மாளிகைகளிலும், செல்வர் வீடுகளிலும், நொய் மணலைக் கொண்டும், நிரைக் கொண்டும் நிரப்பிய கன்னல், நாழிகை வட்டில் ஆகியவையே அந்நாளைய கடிகாரம் (கடிகை+ ஆரம்) ஆகும்.

ஒன்றரை முழக் கோலினை வெட்டவெளியில் நட்டுப் பருதி ஒளி நிழல் விழும் அளவைக் கொண்டு, பொழுதினை (நேரத்தை) அறிந்தனர்.

ஆண்டுக் கணக்கு

ஆண்டுக் கணக்கென்பது தொல்பழங் காலத்தில் அரசரின் பிறந்த நாளான பெரு மங்கலமும், சிறந்த நாளான மண்ணுமங்கலமும் கொண்டிருந்தனர். இவ் வழக்கு வேற்றவர் வரவால் மூவரசர் ஊழி (சகாத்தம்), பாண்டியர்