பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

பிறையைப் பார்த்தால் நாளைத் தெரியும்.

பேசாத கடிகாரம் பீர்க்கம் பூ.

காலம் கடந்தவர் கடவுள் ஒருவரே.

தாய்க்குத் தெரியும் பாலூட்டும் நேரம்.

பசுவுக்குத் தெரியும் பாலூட்டும் காலம்.

காலங்தோறும் கோலம் மாறும்.

கலப்பைப் பிடித்தவன் காலம் அறிவான்.

கல்விக்குக் காலமில்லை.

கல்வியும் கடவுளும் காலங் கடந்தவை.

கண்ணிருப்பவனுக்குக்கடிகாரம் எதற்கு.

கைகளுக்கு இல்லை காலக் கணக்கு.

கணக்கினை எடுக்கக் காலம் இல்லை.

காலம் அளக்கும் கணக்கர் இல்லை.

காலம்தோறும் பூக்கள் பூக்கும்.

பூத்த பூக்கள் பொழுதினைக் காட்டும்.

காக்கை கரைய கதிர்தலை காட்டும்.

கோழி கூவ ஞாயிறு எழுவான்.

கோட்டான் கூவும் கும்மிருள் போது.

ஆனைச் சாத்தன் அதிகாலைக் கதிபதி.

பொழுதைக் காட்டாத பூவுண்டா?

கால உழவன் கதிர்மணி அறிவான்.