பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

வாழ்வை ஒரே நேரத்தில் வீசிப் பறி கொடுப்பது பற்றி எண்ணவே பயப்படுவதும், அதே சமயத்தில்,சிறிது சிறிதாகவும் சிப்பம் சிப்ப மாகவும் வாழ்க்கையை வீசி வினடிப்பதைப் பற்றிக் கவலைப் படாததும், எவ்வளவு மடைமை.

—ஜான் ஹோஷ்

அரை மணியைக் கூட அற்பமாகக் கருதுவதைக் காட்டிலும், அந்த அரை மணி நேரத்தில் மிக அற்புதமான காரியத்தைச் செய்து கொண்டிருப்பதே மேல்.

—யொஹன் கேத்தே

உறுதியான கண்பனாகவும், குணமாக்குபவனாகவும், இருக்கும் காலம், கருணையற்ற பகைவனாகவும் இருக்கும்.

—மகாத்மா காந்தி

நம் எண்ணங்கள் அனைத்தையும் விட, காலம், நமக்கு அதிகம் போதிக்கும்.

—பெஞ்சமின் டிஸ்ரேலி

இனிய பெண் ஒருத்தியுடன், இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்தால், ஒரு நிமிடம் போலவே, உனக்குத் தோன்றுகிறது. சூடான அடுப்பு மேல் நீ, ஒரு நிமிடமே உட்கார்ந்திருந்தாலும், அது உனக்கு இரண்டு மணி நேரமாகப் படுகிறது. அதுதான், 'சார்பியல் கோட்பாடு'.

—ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்