பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

காலமும் கடலலையும், காத்திருக்கா எம் மனிதனுக்கும்.

—ஆங்கிலப் பழமொழி

வருங்கால சந்ததியார்க்குக் காலம் அனைத்தையும் அம்பலப்படுத்திவிடும். அது பெரிய உளறுவாயன்; கேள்வி கேட்கப்படாத போது கூடப் பேசும்.

—யூரிப்பிடிஸ்

காலத்தின் துணையில்லாமல் நீ செய்யும் எதையும், காக்க உதவுவதில்லை, காலம்.

—அனட்டோல் ஃபிரான்ஸ்

காலம், குழந்தைப் பருவத்தின் கனத்த சிறகுகள்; வயதில், ஒசையின்றி விரைந்தோடும் ஆறு.

—வால்ட்டர் டெலாமேர்

நேரத்தைத் தேர்ந்தெடுப்பது, நேரத்தை மிச்சப்படுத்துவதாகும்.

—ஃபிரசன்ஸிஸ் பேக்கன்

காலத்தை வீணடிக்காத மனிதன். ஆண்டுகளில் குறைவாக இருந்தாலும், மணிக்கணக்கில் முதியவனாக இருக்கக் கூடும்.

—:பிரான்ஸிஸ் பேக்கன்