பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை


பழங்கால மக்கள் நேரத்தைச் சூரியனைக் கொண்டும், விண் மீன்களைக் கொண்டும், பூமியில் வாழும் நிழலைக் கொண்டுமே கணித்து வந்தனர்.

தமிழ் மக்களும் பல வகை அறிவியல் நோக்கோடு, காலத்தின் நேர அளவைக் கணக்கிட்டு வந்தனர்.

அதன் பின், உலக அரங்கில் அறிவியல் நோக்கில் ஆராய்ச்சி வளர்ந்தாலும், நம் பங்கும் அதில் உண்டு என்பதை நூலில் விவரித்துள்ளார் ஆசிரியர்.

‘அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்’ எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்து விளங்கி, வளர்ந்து வந்துள்ளது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள எளிமையாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

தமிழ் மக்களும் மாணவ மணிகளும் விரும்பி வரவேற்பார்கள். வாசகப் பெருமக்களுக்கும், ஆசிரியர் த. கோவேந்தன் அவர்களுக்கும் எங்கள் அன்பு கலந்த நன்றி.

-பதிப்பகத்தார்