பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

வரையறை விளக்கம் செய்ய முடியாமலும், முரண்பாடுள்ள புதிராகவும் இருப்பவற்றில் தலையாயது, காலம், கடந்த காலம் சென்று விட்டது. எதிர்காலம் வங்து சேரவில்லை. காம் விளக்கி இனம் காண முற்படும் நேரத்திலே, நிகழ்காலம், கடந்த காலமாகிறது; மின்னல் வீச்சுப் போல், தோன்றுவதும் மறைவதும், அக்கணமே.

—சார்ல்ஸ் கோல்ட்டஸ்

காலமெனும் நாடோடிக் கிழவா
உன்! கோல பவனியை சற்றே நிறுத்தி,
ஒரு காட்பொழுதேனும் தங்கிச் செல்லாயோ?

—ரால்ஃப் ஹாட்ஜ்ஸன்

மனிதன் ஓயாமல் கொல்ல முயல்வதும், மனிதனை இறுதியில் கொன்று முடிப்பதும் காலம்.

—ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர்

எனக்குரிய காலம் இன்னமும் தோன்ற வில்லை. சிலர், தங்கள் பிறவிக் காலம் முன்பே, பிறக்கின்றனர்.

—ஃப்ரீட்ரிஷ் நீட்ஷே.