பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

பிறக்க ஒரு காலம்; இறக்க ஒரு காலம்; நடவு செய்ய ஒரு காலம்; நட்டதைப் பிடுங்க ஒரு காலம்; கொல்ல ஒரு காலம்; குணமாக்க ஒரு காலம்; இடிக்க ஒரு காலம்; கட்ட ஒரு காலம்; அழ ஒரு காலம்; நகைக்க ஒரு காலம்; புலம்ப ஒரு காலம்; ஆடலாட ஒரு காலம்.

—ஸாலமன் மன்னன் (விவிலியம்)

காலம் தாழ்த்திச் செய்யும் இயல்புடையவன், மிகுதியான கால அளவில் சிறிய காரியத்தைச் செய்து முடிப்பான். அச்சிறு செயலால் விளையும் சுருங்கிய பயனால் துன்பமும் எய்துவான்.

—சுக்கிர நீதி

மக்கள்- இறைவனால் கொடுக்கப் பெற்ற இரண்டு வரங்களை எப்போதும் மறந்து விடுகிறார்கள். ஒன்று நேரம். மற்றொன்று ஆரோக்கியம்.

—முகம்மது நபி

விருப்பமும் நம்பிக்கையும் தூண்டுமிடத்தே. மனிதன் உயிருக்கு அஞ்சிப் பினவாங்கலாகாது. பாதையில் ஒரு கணம்கூட தாமதிக்கக் கூடாது. ஒரு கணம்கூடச் சோம்பியிருக்கக் கூடாது. தாமதம் செய்பவன் பாதையினின்று வலிந்து புறத்தே தள்ளப்படுகிறான்.

—பரீத் உத்தீன் சுதீதர்